தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க.,தலைவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2020-10-07 07:39 GMT
சென்னை,

தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து  இருவரும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து கடந்த 2 ஆம் தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இந்நிலையில் விஜயகாந்த்  மீண்டும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 அம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மியாட் மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்