எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை
எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மதுரை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வு கடந்த ஜனவரி 12,13ல் நடைபெற்றது. அந்த எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தொடர்பான மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.