பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை - திமுக எம்.பி கனிமொழி

பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-05 12:47 GMT
சென்னை, 

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி துவங்கி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த சில தினங்களுக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர். 

இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். பின்பு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி துவங்கி உள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது, பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்