காதல் திருமணம் செய்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ: தீக்குளிக்க முயன்ற மணமகளின் தந்தை
காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ: தீக்குளிக்க முயன்ற மணமகளின் தந்தை மீது வழக்கு
சென்னை
கள்ளக்குறிச்சி தொகுதி தனித் தொகுதி அதிமுக எம். எல் ஏ பிரபு (வயது 38 ) தியாகதுருகத்தைச் சேர்ந்த கோயில் குருக்கள் ஒருவரின் 19 வயது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தையும் தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணிபுரிந்துவரும் சாமிநாதன் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோஅதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ ஆங்கிலம் இரணாமாண்டு படித்து வரும் தனது மகளை எம்.எல்.ஏ பிரபு ஆசைவார்த்தைகள் அக்டோபர் முதல் தேதியன்று கடத்திச் சென்றுவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்
பொருளாதார பலமும், அதிகார பலமும் உள்ள எம்.எல்.ஏ போலீசாரிடம் புகார் கொடுக்க சென்றால், பெண்ணையே கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். 19 வயதான எனது மகளை 38 வயது எம்.எல்.ஏ கடத்தி சென்றுவிட்டார். இது என்ன நியாயம். என் மகளை மீட்டுக் கொடுங்கள் என்று பெண்ணின் தந்தை கைகூப்பி இறைஞ்சும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தனது பெற்றோர் முன்னிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதாக எம்.எல்.ஏ பிரபு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
எம்.எல்.ஏ பிரபு, தனது மகள் சவுந்தர்யாவை திருமணம் செய்ததால் சாமிநாதன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் மீது தற்கொலை முயற்சி செய்ததாக தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்