ஆழியாறு அணையிலிருந்து நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
ஆழியாறு அணையிலிருந்து நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
ஆழியாறு அணையிலிருந்து நாளை மறுநாள் முதல் 80 நாட்களுக்கு உரிய இடைவெளியுடன் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நீர் திறப்பின் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22,116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.