நிலுவையில் உள்ள ஆன்லைன் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர்,
தென் மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பம் செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் பட்டா மாறுதல் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பலர் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களை கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி விசாரணை செய்த நீதிபதி கிருஷ்ணகுமார், இது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இது பற்றிய விசாரணை, நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் மீண்டும் வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “தமிழகத்தில் 7 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் பட்டா மாறுதல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர், இதில் சப்-டிவிஷன் தேவை உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் மனுதாரர்களுக்கும், சப்-டிவிஷன் தேவையில்லாத 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கும் பட்டா மாறுதல் செய்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணகுமார், அடுத்த 6 மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும் பட்டா மாறுதல் செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மாவட்ட கலெக்டர்கள் மாதந்தோறும் தாசில்தார்களிடம் இருந்து இதுபற்றிய அறிக்கை பெற்று ஆய்வு செய்ய வேண்டும், பட்டா மாறுதல் வழங்காத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், நில நிர்வாக ஆணையர் இதுகுறித்து அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், நிலஅளவைத்துறை இயக்குனர் பட்டா மாறுதல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அது பற்றிய அறிக்கையினை நில நிர்வாக ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.