காணொலி காட்சி மூலம் ‘லோக் அதாலத்’ - தமிழகம் முழுவதும் 4,468 வழக்குகளுக்கு தீர்வு
தமிழகத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 4,468 வழக்குகளுக்கு ‘லோக் அதாலத்’ மூலம் தீர்வு காணப்பட்டு ரூ.83 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.;
சென்னை,
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ‘லோக் அதாலத்’ மூலம் தீர்வு காண 3 மாதத்துக்கு ஒருமுறை தேசிய அளவில் லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான வினீத்கோத்தாரி, லோக் அதாலத்தை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
மொத்தம் 4,468 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.83 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடகாவில் முதலில் காணொலி காட்சி மூலம் லோக் அதாலத் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் காணொலி காட்சி மூலம் லோக் அதாலத் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.