வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் வரை கால அவகாசம்: மத்திய நிதித்துறை உத்தரவு

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் வரை கால அவகாசம் வழங்கி மத்திய நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-10-01 01:12 GMT
சென்னை, 

வருமான வரித்துறைக்கு ஒவ்வொருவரும் நிதி ஆண்டு தோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த, 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரல் மாதம் தொடங்கியது. 

ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டது. 

2018-2019-ம் நிதியாண்டுக்கான, அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு நவம்பர் 30-ந்தேதி வரை, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மத்திய நிதித்துறையின் உயர் அதிகாரி ஆர்.ராஜராஜேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்