பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-24 08:08 GMT
சென்னை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அவர் விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்