வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு; எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-23 05:12 GMT
ராமநாதபுரம்,

நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட திருத்தம் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். இதனையடுத்து மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமியிடம், “வேளாண் மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவளித்துவிட்டு, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அதிமுக அரசு வேளாண் மசோதாவை ஆதரிக்கிறது என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்