தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த அமைக்கப்பட்ட ரெங்கராஜன் உயர்நிலை குழு அறிக்கை எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன.
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுனர்கள் அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்து இருந்தது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரெங்கராஜன் தலைமையிலான 24 பேர் கொண்ட இந்த குழு பலமுறை ஆலோசனை மேற்கொண்டது. இதனையடுத்து தமிழக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான தங்களது கருத்துகள் அடங்கிய அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யவுள்ளனர். தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.