தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பிரமாண்ட மணி பா.ஜ.க. அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் இருந்து ராமர் கோவில் நோக்கி செல்லும் பிரமாண்ட மணிக்கு, சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் அமையவுள்ள மணி தமிழகத்தில் தயாராகி இருக்கிறது. 5 அடி உயரத்தில் 613 கிலோ எடையில் தயாராகி இருக்கும் இந்த பிரமாண்ட மணி 21 நாட்கள் (4 ஆயிரத்து 552 கி.மீ.) கடந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
இந்த பிரமாண்ட மணிக்கு ராமேசுவரத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அங்கிருந்து இந்த மணி சென்னை நோக்கி கொண்டு வரப்பட்டது. இந்த மணி கொண்டு வரப்படும் வாகனத்தை பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மாண்டா ஓட்டி வந்தார். இந்த மணி நேற்று மாலை சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பிரமாண்ட மணிக்கு கமலாலயத்தில் குவிந்திருந்த பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கமலாலயத்தில் அந்த பிரமாண்ட மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் வர்த்தகர் அணி துணைத்தலைவர் சி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சிறப்பு வழிபாடு முடிவடைந்த நிலையில் அந்த பிரமாண்ட மணி ராமர் கோவில் நோக்கி புறப்பட்டது. இந்த மணி 10 மாநிலங்கள் கடந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.