மத்திய அரசின் விவசாய சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் 25-ந் தேதி சாலை மறியல் போராட்டம் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
மத்திய பா.ஜ.க. அரசு வேளாண்துறை சார்ந்த 3 சட்டங்களையும் இன்று (நேற்று) நிறைவேற்றிவிட்டது.
சென்னை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு வேளாண்துறை சார்ந்த 3 சட்டங்களையும் இன்று (நேற்று) நிறைவேற்றிவிட்டது. இந்த நாள் இந்திய விவசாயிகளை பொறுத்தவரை ‘கருப்பு ஞாயிறு’ ஆக அமைந்துவிட்டது. இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எந்த வித பாதுகாப்பும் இருக்காது. இந்த சட்டத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழக முதல்-அமைச்சர் பேசி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த சட்டங்களை பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க. பெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றி அடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.