திருமலையில் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது திருப்பதி திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை
திருப்பதி திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் நடந்தது. திருமலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒப்படைக்கப்படுகிறது.
சென்னை,
திருப்பதி திருமலை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இந்து தர்மார்த்த சமிதியின் திருக்குடைகள் சிறப்பு பூஜைகளுடன் நேற்று திருமலை புறப்பட்டன. ஊர்வலம் தவிர்க்கப்பட்டதால், பக்தர்கள் நேரலையில் திருக்குடை பூஜைகளை தரிசித்தனர்.
இதுகுறித்து, இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-
திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரமோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. திருமலை பிரமோற்சவ காலத்தில், ஆண்டுதோறும், தமிழகத்தில் இருந்து இரண்டு மங்கலப்பொருட்கள் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும்.
ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று, தமிழக பக்தர்கள் சார்பில், ஆதிசேஷன் அம்சமான திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும். பல நூற்றாண்டுகளாக இந்த ஆன்மிக பாரம்பரியம் நடந்து வருகிறது. இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலையில் சமர்ப்பிக்கப்படும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால், ஆன்மிக பாரம்பரிய வழக்கம் தடைபடாதபடி, புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம் சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலில், வெங்கடாஜலபதிக்கு திருமஞ்சனம், ஒய்யாளி சேவை, ஸ்ரீசுதர்சன யாகம், மகாலட்சுமி யாகம், சுத்தம் யாகம், தன்வந்திரி யாகம் நடந்தன. தொடர்ந்து திருக்குடைகளுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, இந்து தர்மார்த்த சமிதியின் திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள் அவரவர் பகுதியில், “ஓம் நமோ நாராயணாய” மந்திரத்தைச் சொல்லி, பாரதத்தின் நன்மைக்காக சங்கல்பம் எடுத்துக்கொண்டனர். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், திருமலையில் திருக்குடைகள் நாளை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நேற்று காலை, இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி தலைமையில், திருப்பதி திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆன்மிக ஊர்வலம் இல்லாமல், திருக்குடைகள் திருமலை புறப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்படும் திருக்குடைகளில், திருச்சானூர் தாயார் கோவிலில் 2 திருக்குடைகள் இன்று (திங்கட்கிழமை) சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட உள்ளன.
திருக்குடை சிறப்பு நிகழ்ச்சிகளை, பக்தர்கள் சமூக ஊடகங்களில் நேரலையில் தரிசித்தனர்.