இரண்டாவது நாளாக பின்னடைவு சென்செக்ஸ் 134 புள்ளிகள் இழப்பு நிப்டி 11 புள்ளிகள் இறங்கியது

வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வியாபாரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக பின்னடைவு கண்டது.

Update: 2020-09-18 21:55 GMT
மும்பை.

வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வியாபாரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக பின்னடைவு கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 புள்ளிகள் இறங்கியது.

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நிதிச்சேவைத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.16 சதவீதம் இறங்கியது. அடுத்து வங்கித்துறை குறியீட்டு எண் 1.13 சதவீதம் குறைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 134.03 புள்ளிகளை இழந்து 38,845.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,200.42 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,635.73 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்த சந்தையில் 1,307 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 1,433 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. 170 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.5,632 கோடியாக அதிகரித்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.2,820 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 11.15 புள்ளிகள் இறங்கி 11,504.95 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,584.10 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,446.10 புள்ளிகளுக்கும் சென்றது.

மேலும் செய்திகள்