தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 5 பேர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு அரசாணை வெளியீடு
தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;
சென்னை,
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதிவரை ஏற்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காலியிடத்தை நிரப்புவதற்காக, தமிழக அரசுப் பணியில் உள்ள (குரூப்-1) அலுவலர்கள் 5 பேரை தமிழக அரசு பணியில் ஐ.ஏ.எஸ். பணியிடங்களுக்கு பணிநிலை உயர்த்தி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயலாளர் மற்றும் பணியாளர்கள் அலுவலர் பி.கணேசன், கலால் வரி துணை ஆணையர் எம்.எஸ்.சங்கீதா, மாநில விருந்தினர் மாளிகை இணை நெறிமுறை அலுவலர் டி.கிறிஸ்துராஜ், வன்னியகுல ஷத்திரிய பொதுநலன் அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளர் ஆர்.பிருந்தா தேவி, சிறப்பு டி.ஆர்.ஓ. எம்.அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.