பிரதமர் மோடி 70-வது பிறந்தநாள்: பா.ஜ.க. சார்பில் கோலாகல கொண்டாட்டம் ‘கேக்’ வெட்டியும், பலூன்கள் பறக்கவிட்டும் உற்சாகம்
பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோலாகல நிகழ்ச்சிகள் நடந்தன. ‘கேக்’ வெட்டியும், பலூன்கள் பறக்கவிட்டும் உற்சாகம் அடைந்தனர்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி, தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று சென்னையில் பல்வேறு கோலாகல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை எல்.முருகன் ஏற்றினார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் பாண்டிபஜாரில் நரேந்திரமோடி புகைப்படங்கள் மற்றும் அவரை வாழ்த்தி ஆடல்-பாடல்கள் இடம் பெறும் பிறந்தநாள் வீடியோ காட்சியை வெளியிட்டார். கட்சியின் கலை, இலக்கிய பிரிவின் சார்பில் ஆயிரம் பலூன்களை பறக்க விட்டார். பின்னர் பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் படங்கள் அடங்கிய கொடியில் கையெழுத்திட்டார்.
சென்னை தியாகராயநகர் தணிகாசலம் சாலையில் மகளிரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 70 அடி ‘கேக்’கை எல்.முருகன் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அங்கிருந்து குதிரைகள் பூட்டிய ‘சாரட்’ வண்டியில் எல்.முருகனை பா.ஜ.க.வினர் ஊர்வலமாக கமலாலயம் அழைத்து வந்தனர். சாரட் வண்டிக்கு முன்பு தெருக்கூத்து, ஒயிலாட்டம், காவடியாட்டம், குதிரையாட்டம் போன்ற நிகழ்வுகளிலும் கலைஞர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக சென்றனர்.
அதனைத்தொடர்ந்து கமலாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எல்.முருகன் தலைமையில் நடந்த விழாவில் நடிகை நமீதா, துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் தங்க கணேசன் தொகுத்த ‘தேசிய கல்வி கொள்கை 2020- சிறப்பம்சங்கள்’, எனும் புத்தகத்தை எல்.முருகன் வெளியிட்டார். பின்னர் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்து பெறும் திட்டத்தை தொடங்கி வைத்து படிவத்தில் எல்.முருகன் முதல் கையெழுத்திட்டார்.
அதனைத்தொடர்ந்து ஆயிரம் மாடித்தோட்ட செடிகள் வழங்குதல், மகளிர் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்பட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ‘மைனாரிட்டி மோர்ச்சா’ எனும் யூ-டியூப் சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி கமலாலயமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ராட்சத திரைகள் மூலம் நரேந்திர மோடி குறித்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
விழாவில் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பலதரப்பட்ட மக்களும் இன்றைக்கு பா.ஜ.க.வை நோக்கி வருகின்றனர். இதற்கு முழு காரணம் நரேந்திரமோடி மீது, அவரது தூய்மையான, நேர்மையான அரசியல் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான். இன்றைக்கு தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியை தொடங்கியிருக்கிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறுவோம். எங்கள் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்புவோம் என்று நரேந்திரமோடி பிறந்தநாளில் உறுதி ஏற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து எல்.முருகனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என முதல்-அமைச்சர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அது அவர்களது கொள்கை. மும்மொழி கொள்கை வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. தமிழகத்தில் கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகம். மாணவர்களும், பெற்றோரும் தயாராக இருக்கும்பட்சத்தில் எத்தனை மொழிகள் வந்தாலும் வரவேற்கத்தக்கதே...
கேள்வி:- நீட் தேர்வில் மாணவர்களின் உயிரிழப்புக்கு மத்திய அரசை மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே?
பதில்:- நீட் தேர்வில் 13 மாணவர்களின் உயிரோடு விளையாடியது தி.மு.க. தான். மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, தற்போது மாணவர்களின் உயிரோடு, உணர்வுகளோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். மாணவர்களின் உயிரிழப்புக்கு முழு காரணம் மு.க.ஸ்டாலின் தான்.
மேற்கண்டவாறு எல்.முருகன் பதிலளித்தார்.