தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8 ஆயிரத்து 600ஐ தாண்டியது
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 600ஐ தாண்டியது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 82 ஆயிரத்து 683 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,319 ஆண்கள், 2,241 பெண்கள் என மொத்தம் 5,560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 103 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 572 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 992 பேரும், கோவையில் 530 பேரும், சேலத்தில் 291 பேரும், குறைந்த பட்சமாக ராமநாதபுரத்தில் 30 பேரும், பெரம்பலூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 627 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 646 ஆண்களும், 2 லட்சத்து 8 ஆயிரத்து 745 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 22 ஆயிரத்து 321 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 68 ஆயிரத்து 418 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 59 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், கடலூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும், கோவை, காஞ்சீபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 3 பேரும் விழுப்புரம், வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், செங்கல்பட்டில் தலா இருவரும், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனியில் தலா ஒருவரும் என 19 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு 8 ஆயிரத்து 600ஐ தாண்டியுள்ளது. அதாவது தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்து 618 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 524 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 956 பேரும், கோவையில் 364 பேரும், கடலூரில் 296 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 610 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 905 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 231 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.