டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரர், பதவி படைத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது

Update: 2020-09-17 20:19 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரர், பதவி படைத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலச்சந்திரனும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்