கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி விரைவில் குணமடைய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி விரைவில் குணமடைய வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கொரேனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நிதின் கட்காரி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவில் கூறுகையில், 'நிதின் கட்கரி கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து நலம் பெற்று, பூரண உடல்நலன் பெற விரும்புகிறேன்'. என்று பதிவிட்டுள்ளார்.
I wish Thiru @nitin_gadkari a speedy recovery from #COVID19 and safe return to good health. https://t.co/2oCmOBG3nk
— M.K.Stalin (@mkstalin) September 17, 2020