சென்னை பல்லாவரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை பல்லாவரம் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை,
பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை ஆகிய சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னைபல்லாவரத்தில் ரூ.82.60 மதிப்பீட்டில் 1.53 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய பாலத்தில் வாகன போக்குவரத்தையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக வண்டலூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.