நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம்- பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு
நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம் என்று பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம். காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு யாரால் கொண்டு வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
நீட் தேர்வால் 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக தான் என்றும் அவர் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.