பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி கூடுதலாக இரண்டு மணி நேரம் சேர்த்து இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.