தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலைமையம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.