தமிழகத்தில் இன்று மேலும் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று மேலும் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-11 15:03 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,231 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 47,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,006 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,35,422 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,532 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 84,893 கொரோனா மாதிரி பரிசோதனைகளும், இதுவரை 57,15,216 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்