நோய்ப்பரவல் குறைந்த பிறகே மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

நோய்ப்பரவல் குறைந்த பிறகே மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-09-11 15:00 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினர். அதனைதொடர்ந்து  காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கொரோனா ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கண்டறிய செங்கல்புட்டு, காஞ்சிபரத்தில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாலாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,800 கோடிக்கு மேல் சுயஉதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

எல்லா மாவட்டங்களிலும் வீடு கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பணிகள் நடக்கிறது.

நோய்ப்பரவல் குறைந்த பிறகே மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தொடங்கப்படும்.அறிஞர் அண்ணா பட்டு பூங்கா பணிகள் 25% நிறைவு பெற்றுள்ளது.

காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வேளாண்பணிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏரிகள் குடிமராமத்து பணிகளின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்