மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 1.01 கோடி பேர் பயணம் - மாநகர போக்குவரத்துக் கழகம்
மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 1.01 கோடி பேர் பயணித்துள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 1.01 கோடி பேர் பயணித்துள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளொன்றுக்கு 2,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர் என்றும் மாநகரப் பேருந்துகள் மூலம் இதுவரை ரூ.10 கோடி வருவாய் வந்துள்ளது என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.