ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள்: நாளை தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

Update: 2020-09-08 16:48 GMT
சென்னை, 

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இதற்கு தடை விதிக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 

மேலும் செய்திகள்