கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜக கைப்பற்றும் : பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜக கைப்பற்றும் என பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-08 15:29 GMT
சென்னை,

கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த வசந்தகுமார் எம்.பி.க்கு கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி வசந்தகுமார் உயிரிழந்தார்.

மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பொற்றோர் சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக  அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்ததையடுத்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்