மாவட்டங்களுக்கான கடன் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது என்றும் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-09-08 11:30 GMT
சென்னை,

தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டியிருந்தது

இந்த நிலையில் தமிழக மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது என்றும் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், 

ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் சில சரத்துகள் பாரபட்சமாக உள்ளது. மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது. தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.மேலும் பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்