இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - மத்திய கல்வி அமைச்சருக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-09-07 09:09 GMT
சென்னை,

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும் என்றும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்