மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு - தமிழக அரசு அறிவிப்பு
மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் இன்று வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 5 மாதங்களில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கபட்டுள்ளது. இதன் மூலம் 67ஆயிரத்து 212 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மின்னணுவியல் துறைக்கான புதிய தொழில் உற்பத்தி கொள்கையின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
* மின்னணு துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு
* நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கால கடன்களுக்கு அதிகபட்சமாக 5% வரை வட்டி மானியம்
* மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீட்டுத்தொகையில் 30% வரை மூலதன மானியம்.
* 2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மின்னணு துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு.
* மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படும்.
* 2024-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.