தமிழகத்தில் புதிய தொழிற்கொள்கை வெளியீடு

தமிழகத்தில் மின்னணு துறைக்கான புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.;

Update: 2020-09-07 05:17 GMT
சென்னை,
 
கொரோனா பொதுமுடக்கத்தால் இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை ஈர்க்க புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான கூடுதல் சலுகைகள் புதிய தொழிற்கொள்கையில் இடம்பெற்றுள்ளன. தொழிற்கொள்கை வெளியிடும் நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலீடுகளை ஈர்க்க மின்னணு  நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் வகையில் தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்