இரவு நேரத்தில் பஸ்களை கவனமாக இயக்க வேண்டும் - டிரைவர், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுரை
5 மாத ஓய்வுக்கு பிறகு இயக்குவதால், அரசு பஸ்களை இரவு நேரத்தில் கவனமாக இயக்கவேண்டும் என்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கி இருக்கிறது.
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. தொடர்ந்து நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பொது போக்குவரத்து இல்லாமலேயே இருந்தது.
கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளாக பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கிய நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு நீண்ட தூரம் செல்வதற்கான அரசு விரைவு பஸ்கள் 7-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி, இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அவ்வாறு பஸ்களை இயக்கும்போது, டிரைவர்கள், கண்டக்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதில், கடந்த 5 மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரத்தில் பஸ்களை கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கண்டக்டர்கள் கண்டிப்பாக இருக்கையில் அமர்ந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும். வழித்தடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதாலும், சாலை தடுப்புகள் அதிகமாக உள்ளதாலும் எச்சரிக்கையுடன் பணிபுரிய வேண்டும். நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கிளை மேலாளர்களும் இதை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கிறது.