இ - சஞ்சீவி இணையதள மருத்துவ சேவை : தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
இ - சஞ்சீவி இணையதள மருத்துவ சேவையில் தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகை,
நாகை மாவட்டம் திருக்கடையூர், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாகை மாவட்டத்தின் கொரோனா பாதிப்புகளின் நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
இ - சஞ்சீவி ஒபிடி இணையதள மருத்துவ சேவையில் தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த சேவையை பயன்படுத்துவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இ.சஞ்சீவி, ஓ.பி.டி மருத்துவ சேவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இ - சஞ்சீவி சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்று பயனடையுமாறு, பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.