மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் - பல்கலை. பதிவாளர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் என்று பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்திற்கான தேர்வு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளதாக பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார்.
மேலும் முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2மணி முதல் 5 மணி வரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரியில் தேர்வு நடைபெறும்.
இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய ஆய்வியல் நிறைஞர் (Mphil) மாணவர்கள் செப்-23ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும்
மேலும் அவர்கள் பயின்ற கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் அருகிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் தேர்வு எழுத ஆவண செய்யப்படும் என்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.