திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என திமுக தெரிவித்துள்ள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.
பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்ய காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக தெரிவித்துள்ளது.