விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-07-26 10:19 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி இதுவரை இன்று 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் விருதுநகரில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,490 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 3,274 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,164 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்

இன்று தொற்று உறுதியானவர்களில் 24 பேர் கர்ப்பிணிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நாளை முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்