சென்னையில் கொரோனாவுக்கு 13,923 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்
சென்னையில் கொரோனாவுக்கு 13,923 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.
சென்னை,
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் கொரோனா பாதிப்படைவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு 13,923 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். கொரோனா பாதித்த 93,573 பேரில் 77,625 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,989 பேர் உயிரிழந்துள்ளனர்.