நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-25 08:27 GMT
சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு சிடி ஸ்கேன் வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய சி.டி.ஸ்கேன்களை பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை 2176 கர்ப்பிணி பெண்கள் கொரோனா சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டு 1515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

10 நாட்களில் கொரோனா குறையும் என முதலமைச்சர் கூறி இருந்த நிலையில் அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா வைரஸ் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்