ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் - ஜெ.தீபா

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

Update: 2020-07-25 07:32 GMT
சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியது மூலம் வேதா நிலையம் அரசுடைமையானது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன். அரசுடைமையாக்கியதை எதிர்த்து சட்டரீதியாக மேல்முறையீடு செய்வோம். வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும். வேதா நிலையத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்  என்றார்.

மேலும் செய்திகள்