சென்னையில் கொரோனா பாதித்த 92,206 பேரில் 76,494 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னையில் கொரோனா பாதித்த 92,206 பேரில் 76,494 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Update: 2020-07-25 06:18 GMT
சென்னை,

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:-

* சென்னையில் கொரோனா பாதித்த 92,206 பேரில் 76,494 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

* சென்னையில் கொரோனாவுக்கு 13,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அண்ணா நகர்-1756, திரு.வி.க. நகர்-1221, அடையாறு-1155, தேனாம்பேட்டை-1136  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர்-996, வளசரவாக்கம்-846, ராயபுரம்-817, தண்டையார்பேட்டை-591, ஆலந்தூர்-536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* பெருங்குடி- 417, திருவொற்றியூர்- 413, மாதவரம்- 407, சோழிங்கநல்லூர்-309, மணலி-196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*  இதுவரை 1,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் 58.36 சதவீதம் மற்றும் பெண்கள் 41.64 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்