வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

Update: 2020-07-24 07:12 GMT
வேலூர்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான்  கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதையடுத்து கடந்த மாதம் முதல் இன்று வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது..

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,812 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  1,151 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 3,623 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுபடுத்த குடியாத்தம் நகராட்சியில் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்