கொரோனா கால மோசடிகள்; வருகிற 27ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் வருமகிற 27ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
மு.க.ஸ்டாலின் தலைமையில் வருமகிற 27ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திமுக தலைமைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27 ந்தேதி திங்கட்கிழமை 10.30 மணி அளவில் காணொலிக் காட்சி வழியாக அனைத்துக் கட்சி கூட்ட்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் பங்கேற்க உள்ள இக்கூட்டத்தில், அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்கப்படும் என திமுக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.