சென்னையில் கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-24 05:29 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. 

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது.  எனினும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர்,   கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் தலா 1 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்