புதுச்சேரி அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-07-23 12:14 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை உள்ளது. இந்த சிலை மீது இன்று மர்ம நபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எழுந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்