கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பதில்
கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னை,
அதிமுக அரசு கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை மறைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், கொரோனா மரணத்தைப் போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்த நிலையில் சீறிய நடவடிக்கையின் அடிப்படையில், அதிக பாதிப்புகள் இருந்த ராயபுரம் மண்டலம் விரைவில் பூஜ்யம் என்ற நிலையை எட்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன ஆதாயம்..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.