தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-22 10:28 GMT
கோவில்பட்டி,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்கள் இதுவரி திறக்கப்படவில்லை. ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அனுமதித்தாலும் திரையரங்குகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கோவில்பட்டி அருகே கயத்தாரில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், “திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியக்கூறு இல்லை. வெளிநாட்டில் திரையங்குகள் திறக்கப்பட்டு, ஒரு வரிசைக்கு 2 பேர் அமர்ந்து படம் பார்க்கின்றனர். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபமாக இருக்காது. திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்