தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-21 13:14 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் 56 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 75 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,894 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,344 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 20,35,645 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்