‘ஆன்-லைன்’ வகுப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட்டு கேள்வி
‘ஆன்-லைன்’ வகுப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கினால் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்- லைன்’ மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ‘ஆன்-லைன்’ வகுப்புகளால் மாணவர்களின் விழித்திரை பாதிக்கும். அதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ‘ஆன்லைனில்’ பாடங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும். 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே பாடங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வக்கீல் விமல்மோகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதேபோல, ‘ஆன்-லைன்’ வகுப்பில் மாணவர்கள் பங்கேற்க முயற்சிக்கும்போது, ஆபாச படங்கள் குறுக்கிட்டு கவனத்தை திசைத்திருப்பலாம். அதனால், ஆபாச இணையதளம் குறுக்கிடாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘ஆன்-லைன்’ வகுப்பினால் மாணவர்களின் விழித்திரை பாதிக்குமா?’ என்பது குறித்து சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி டீன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் இதுதொடர்பாக வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடம் வீதம் 4 வகுப்புகள் நடத்தலாம் என அனுமதிஅளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.ரவீந்திரன், ‘ஆன்லைன்’ மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதால் ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விழித்திரை பாதிப்பு குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை’ என்றும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதால், ‘ஆன்-லைன்’ வகுப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து பதிலளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.